Sunday, 1 September 2013

பிரபலமடைவதற்காக சொந்த வீட்டின்மீது பெட்ரோல் குண்டுவீசியதாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி 2 பேர் கைது

கட்சியில் பிரபலமடைவதற்காக சொந்த வீட்டின்மீது பெட்ரோல் குண்டுவீசியதாக திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மேற்கு காவல்நிலைய போலீசார், குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
பாஜக நிர்வாகி கைது :
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் 10வது வார்டு கிளைத் தலைவராக உள்ள பிரவீன்குமார் தனது நண்பரான கமலக்கண்ணன் என்பவர் உதவியுடன் சொந்த வீட்டின்மீதே, பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் செல்லப்பாண்டியன் கோவில் தெருவில் உள்ள பிரவீன்குமார் வீட்டின்மீது கடந்த 28ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment