
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'மார்ஸ் ஒன்' என்ற நிறுவனம் லாப நோக்கமில்லாமல் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். இந்த நிறுவனத்தின் முதலீட்டார்களின் நிதியைப் பாதுகாக்கும் அடித்தள அமைப்பான 'இன்டர்பிளானட்டரி மீடியா' குரூப்பின் தாய் நிறுவனம் இதுவாகும்.
இந்த நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயணத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்புபவர்கள் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தது.
இதன்படி, கடந்த 22-ம் தேதி வரை இந்நிறுவனத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரம் என்று தெரியவருகின்றது. இதில், 8,107 இந்தியர்கள் பதிவு செய்து நான்காவது இடத்தில் உள்ளார்கள்.
இதில் பதிவு செய்து முதல் பத்து இடத்தில் இருக்கும் நாடுகளும், பதிவு செய்தோரின் எண்ணிக்கையும் பின்வருமாறு:-
அமெரிக்கா (37,852) ,சீனா (13,124), பிரேசில் (8,686), இந்தியா (8,107), ரஷ்யா (7,138), பிரிட்டன் (6,999), மெக்சிகோ (6,771), கனடா (6,593) ஸ்பெயின் (3,621) மற்றும் பிலிப்பைன்ஸ் (3,516) ஆகும். இந்தத் தகவல் 'மார்ஸ் ஒன்'னைச் சேர்ந்த ஆஷிமா டோக்ராவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 நாடுகளில் இருந்து விண்ணப்பம் வந்துள்ளதாகவும், மக்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்வது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது சாத்தியமாக இருக்கும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து, அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.
No comments:
Post a Comment