Sunday, 1 September 2013

பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம்: திக்விஜய் சிங்


பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ஆசாராமுக்கு பாஜக தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்விட்டரில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.பெண்களுக்கெதிரான குற்றவாளிகள் சாதாரணமானவர்கள் என்றால் தூக்கு தண்டனை, போலி சாமியார்கள் என்றால் பொதுமன்னிப்பா? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக அமளி செய்துவரும் நிலையில், பாஜக-வைச் சேர்ந்த பிரபாத் ஜா, ஆசாராம் பாபு மீதான குற்றச்சாட்டை "காங்கிரஸின் சதி' என்று விமர்சித்திருந்ததையும், பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, ஆசாராம் பாபுவை ஆதரித்துப் பேசியதையும் குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment