Monday, 2 September 2013

காபி கோப்பையால் கணவனை அடித்து கொன்றவர் கைது



டோக்கியோ: கணவருக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஜப்பானிய பெண், காபி கோப்பையால், அவரை அடித்து கொன்றார். ஜப்பானின், டோக்கியோ நகரைச் சேர்ந்தவர் யாசோ ஹிரோஸ், 70; பல்கலைக்கழக பேராசிரியர். இவரது மனைவி எமிகோ. சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ்ந்து வந்த ஹிரோசுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை, எமிகோ தெரிந்து கொண்டார். இதனால், கணவன் மீது அளவு கடந்த கோபம் கொண்ட அவர், கடந்த வாரம், இது தொடர்பாக தம்பதிக்குள் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், காபி கோப்பையை எடுத்து, கணவரின் முகம் மற்றும் தலையில் பலமாக தாக்கினார் எமிகோ. பலத்த காயமடைந்த ஹிரோஸ், மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எமிகோவை, போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment