Thursday, 5 September 2013

பள்ளிவாசல் மீது நாசவேலைகளில் ஈடுபட்டவர்களுக்கு வலைவீச்சு




கனடாவில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நாசவேலைகளில் ஈடுபட்டவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
கனடாவின் Quebec– Chicoutimi பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது பன்றியின் இரத்தத்தை தெளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து Saguenay region பொலிசார் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பள்ளிவாசல் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் இது ஒரு கொடூரமான செயல் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பள்ளிவாசலில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இஸ்லாம் பற்றி தவறாக கூறப்பட்டுள்ளது.
அதாவது குறித்த பள்ளிவாசல் கியூபெக்கிலுள்ள புத்தம் புதிய பன்றியின் இரத்தத்தால் ஞானஸ்தானம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment