
சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் உள்நாட்டு போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராளிகள் வசமிருந்த பகுதிகளில் நேற்று அரசுப்படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த இரசாயனக்குண்டுகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 1300 பேர் கொல்லப்பட்டதாக போராளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களையும் போராளிகள் வெளியிட்டுள்ளனர்.இதில் மூச்சுத்திணறி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பொதுமக்கள் மருத்துவமனைகளில் நிரம்பியிருக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்று பல இடங்களில் நடத்தப்பட்ட இரசாயனக்குண்டு தாக்குதலுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை போராளிகள் வெளியிட்டுள்ளனர்.
இருந்தும் இதுகுறித்து உண்மை நிலை என்ன என்று இன்னும் ஊர்சிதப்படுத்தப்படவில்லை. சிரியா ஆட்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.
ஐ.நா. இரசாயன ஆயுதக்குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சி என்று சிரியா செய்தி நிறுவனம் சானா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உண்மை நிலையை கண்டறிய உடனடியாக சம்பவப் பகுதிகளுக்கு ஐ.நா. குழுவிர் விரைய அரேப் லீக் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment