Friday, 16 August 2013

சீனாவில் வரதட்சணை வாங்காமல், எளிமையான திருமணத்திற்கு எதிர்ப்பு



சீனாவில் நிர்வாண திருமணம் எனப்படும் புதிய வகை திருமண முறை இளைஞர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14ம் திகதி காதலர் தினம் கொண்டாடப்பட்டால், சீனாவில் அந்நாட்டு பாரம்பரியத்தின்படி ஆகஸ்ட் 13ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதிகளவான காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது அந்நாட்டி தொலைக்காட்சி நிறுவனமொன்று, இக்கால இளைஞர்கள் எவ்வகையான திருமணங்களை விரும்புகின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இதில், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யும் போது ஏராளமான செலவுகள் இருப்பதால், இளைஞர்கள் இதனை விரும்புவதில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல், எளிமையான முறையில் திருமணம் செய்த போது பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே பாரம்பரியத்தை பின்பற்றும் பலரும், இவ்வகையான திருமணங்களை நிர்வாண திருமணங்கள் என கேலி செய்தனர்.
மேலும் முறையான சடங்குகள் பின்பற்றாமல் செய்யப்படுவதால், ஆடையில்லாத மனிதனுக்கு ஒப்பானது எனவும் கூச்சலிட்டனர்.
இதனை சவாலாக எடுத்து கொண்ட இளைஞர்கள், எளிமையான முறையில் நடைபெறும் திருமணங்கள் நிர்வாண திருமணங்கள் என்றே பெயர் சூட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சீன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை திருமணங்கள், நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஆய்வில் பங்கேற்ற 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிர்வாணத் திருமணத்தை ஆதரித்துள்ளனர்.
மேலும் இவ்வகை திருமணம் செய்வதால் தேவையற்ற பொருட் செலவு குறைக்கப்படுவதாகவும், பெற்றோரின் மன உளைச்சலை குறைக்க முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment