Sunday, 1 September 2013

புதுப்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்




புதுப்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததாக அந்தப்பெண்ணின் முன்னாள் காதலரான போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த ஆபாச படத்தை அவர் இணையதளத்திலும் வெளியிட்டது அம்பலமாகி உள்ளது.
கல்லூரிக்காதல்
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள சமுத்திரம் தொப்பவளவு கிராமத்தை சேர்ந்தவர் ரம்பா (வயது 27, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் மேட்டூரில் உள்ள அரசு கல்லூரியில் எம்.காம் படித்தபோது, அதே கல்லூரி மாணவரான சதீஸ்குமார் (25) என்பவரை காதலித்தார்.
சதீஷ்குமார், ஜலகண்டாபுரம், மலையம்பாளையம் காட்டு வளவை சேர்ந்தவர். இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.
செல்போனில் ஆபாச படம்
அப்போது ரம்பாவுடன் அவர் நெருக்கமாக இருந்த ஆபாச காட்சிகளை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் அந்த படத்தை காட்டியே ரம்பாவுடன் சதீஸ்குமார் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சதீஸ்குமாருக்கு போலீஸ் வேலை கிடைத்தவுடன் அவர் ரம்பாவை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரம்பா தனது உறவினர் ஒருவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப்பின்பும் உல்லாசம்
இதற்கிடையே, திருமணத்துக்கு பின்பும் தான் செல்போனில் எடுத்த ஆபாச படத்தை காட்டி ரம்பாவை ஆசைக்கு இணங்குமாறு கூறி, சதீஸ்குமார் மிரட்டி வந்தார்.
‘‘நான் அழைக்கும் நேரத்தில் வரவில்லை என்றால், அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன்’’ என்று கூறி அவருடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். அப்போது ரம்பாவின் 1½ பவுன் தங்கசங்கிலியை அவர் பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இணையதளத்தில் வெளியீடு
இதுகுறித்து ரம்பாவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் சதீஸ்குமாரை கண்டித்தார். ஆனால் சதீஸ்குமார் ரம்பாவின் கணவரிடம், செல்போனில் இருந்த ஆபாச படத்தை காட்டி, ‘‘ரம்பாவுடன் நீ வாழக்கூடாது; அப்படி வாழ்ந்தால் இந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்’’ என்று கூறி அவரையும் மிரட்டினார்.
இதனால் பயந்துபோன அவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் சதீஸ்குமார் தான் சொன்னதுபோலவே அந்த ஆபாச காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு விட்டார். இதை அறிந்த கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆதாரத்துடன் புகார்
இதையடுத்து அவர்கள் இணையதளத்தில் வெளியான காட்சியை ஒரு சி.டி.யில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். அதை ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ரம்பா, போலீஸ்காரர் சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இணையதளத்தில் வெளியான ஆபாச காட்சிகளை அழிக்குமாறும் கூறி புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சதீஸ்குமாரை கைது செய்ய சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுவிடம் அனுமதி பெறப்பட்டது. பின்னர் கோவை 4-வது பட்டாலியனில் பணியாற்றி வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சதீஸ்குமாரை போலீசார் ஜலகண்டாபுரத்துக்கு அழைத்து வந்தனர்.
போலீஸ்காரர் கைது
இதையடுத்து அவர் மீது கற்பழிப்பு, பெண்ணை மானபங்கம் செய்தல், உல்லாச காட்சியை இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment