Monday, 2 September 2013

ஜோர்டான் ராணிக்கு தலைவணங்கி வணக்கம் வைத்த போப்பாண்டவர்


வாடிகன் சிட்டி: வழக்கத்திற்கு விரோதமாக, நடைமுறைக்குப் புறம்பாக ஜோர்டான் நாட்டு ராணிக்கு தலை குணிந்து வணக்கம் சொல்லி வரவேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ். வழக்கமாக போப்பாண்டவர் பதவியில் இருக்கும் யாருமே யாருக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்த மாட்டார்கள். மாறாக அவர்களைப் பார்ப்பவர்கள்தான் தலை வணங்கி வணக்கம் செலுத்துவார்கள். ஆனால் பாரம்பரியமாக இருந்து வருவதை உடைத்து புதுப் புரட்சி படைத்து வரும் போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜோர்டான் நாட்டு ராணிக்கு தலைவணங்கி வணக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதேபோல மன்னர் 2ம் அப்துல்லாவுக்கும் அவர் தலைவணங்கி வணக்கம் கூறினார்.

No comments:

Post a Comment