
வீட்டில் கழிப்பறை கட்டித் தராத கணவனை கண்டித்து, இளம் மனைவி விவாகரத்து பெற்ற சம்பவம், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
'நாட்டில், 69 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் இல்லை; கழிப்பறைகள் இருந்தாலும், வெளியிடங்களில் தான் மல ஜலம் கழிக்கின்றனர்' .
இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்த, முதல்வர் ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில், திருமணத்திற்கு முன், 'வீட்டில் கழிப்பறை கட்டிக் கொடுப்பேன்' என, உறுதியளித்து திருமணம் செய்த இளைஞன், திருமணத்திற்கு பிறகு, கழிப்பறை கட்டவில்லை. இதனால், கணவன், மனைவிக்கு இடையே பல மாதங்களாக நீடித்த சண்டை, உச்ச கட்டத்தை அடைந்து, அந்த, 23 வயது இளம்பெண், கணவன் மீது கோபம் கொண்டு, அவனை விவாகரத்து செய்து விட்டார். இந்த தகவல், அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது போல், உ.பி., யிலும், ஐந்து பெண்கள், வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால், கட்டிய கணவனை கைகழுவி விட்டனர் என்ற அதிர்ச்சி தகவலை, அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment