Sunday, 1 September 2013

வாசனை திரவியம் என நினைத்து கொசு மருந்தை முகத்தில் அடித்த சிறுமி பரிதாப சாவு

வாசனை திரவியம் என நினைத்து கொசு மருந்தை முகத்தில் அடித்த சிறுமி பரிதாப சாவு
புதுவை சோலைநகர், குருசுகுப்பம் பிரான்சுவா மார்த்தன் வீதியை சேர்நதவர் ரகுநாதன். இவரது மனைவி சிவலட்சுமி. இவர்களுக்கு வர்ஷிணி (வயது 4) என்ற பெண் குழந்தை இருந்தது. ரகுநாதன் வெளிநாட்டில் வெல்டராக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து வாசனை திரவியம் (ஸ்பிரே) வாங்கி வந்தார். இந்த வாசனை திரவியத்தை குழந்தை வர்ஷிணிக்கு அடித்து காட்டினார்.
வீட்டு சமையல் அறையில் கொசுமருந்து ஸ்பிரே இருந்தது. இதனை சிறுமி வர்ஷிணி வாசனை திரவியம் என நினைத்து முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவள் மயக்கம் போட்டு வீட்டிலேயே விழுந்தார். அவள் தூங்குவதாக நினைத்தனர். ஆனால் இரவு ஆகியும் அவள் கண் விழிக்காமல் இருந்ததால் அச்சம் கொண்டனர்.
உடனே அவளை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். 

No comments:

Post a Comment