Sunday, 1 September 2013

காரைக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவங்கள்:

காரைக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவங்கள்: பொதுமக்கள் பீதி
காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீராம்நகர் சரோஜினி வீதியை சேர்ந்தவர் பஞ்ச வர்ணம் (வயது 50). இவர் நேற்று மாலை தனது மகள் சொர்ணலதா (25)வுடன் அருகில் உள்ள ஆஸ்பத்தி ரிக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் பஞ்சவர்ணத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் கமலா. இவர் நேற்று தனது மருமகளுடன் காரைக்குடிக்கு வந்து விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் கமலாவின் கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
காரைக்குடி வைரவபுரம் 4–வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். அரசு வங்கி கேசியர். இவரது மனைவி தமிழரசி. இவர் மத்திய அரசு அலுவலகத்தில் பணி யாற்றி வருகிறார். நேற்று கணவன்– மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள், தமிழரசியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவர் நகையை பிடித்துக்கொண்டதால் அவர்களால் நகையை பறிக்க முடியவில்லை. மேலும் தமிழரசி கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பினர்.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை யர்களை தேடிவருகிறார்கள்.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே நகை திருட்டு, வீடு புகுந்து கொள்ளை, தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு சம்பவம் போன்றவை அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அஞ்சு கின்றனர்.
திருட்டு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எந்த கொள்ளையனும் பிடிபட வில்லை. எனவே போலீசார் இனிமேலும் காலம் தாமதிக்காமல் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப் பகுதி பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment