
இயேசு என்னை பதவி விலகும்படி கேட்டுக் கொண்டார், எனவே நான் பதவி விலகினேன் என புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் போப் பெனடிக்ட்.
உலக கத்தோலிக்க மத தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் உள்ளார்.
இதற்கு முன்பு போப் ஆண்டவராக பதவி வகித்து வந்த பெனடிக்ட் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது உடல்நிலை மற்றும் மனநிலை ஒத்துழைப்பு தராத காரணத்தால் பணியை தொடர முடியவில்லை, எனவே ராஜினாமா செய்கிறேன் என அப்போது தெரிவித்தார்.
இந்நிலையில் பெனடிக்ட் புதிய தகவலொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, தனிப்பட்ட முறையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.
அப்போது இயேசு எனக்கு கட்டளை பிறப்பித்தார், என்னை பதவி விலகும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
கடவுளின் விருப்பத்திற்கு இணங்க நான் பதவி விலகினேன். எனது பதவி விலகல் கடவுள் எடுத்த முடிவு என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை இத்தாலிய கத்தோலிக்க மத செய்தி நிறுவனமான செனித் வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment