
ஒருமுறை ஹஜ் கடைமையை நிறைவேற்றியவர் அடுத்துவரும் 5 வருடங்களின் பின்னரே
ஹஜ் கடைமையை நிறைவேற்ற முடியுமென சவூதி ஹஜ் அமைச்சு அறிவித்தல்
விடுத்துள்ளதாக ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர்
ஏ.எச்.எம். பெளஸி நவமணிக்கு தெரிவித்தார்.
ஹஜ் முகவர்களுக்கு இப்புதிய சட்டத்தில் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஹஜ் கோட்டாவுக்கு உட்பட்ட முகவர்களுக்கே மேற்படி சலுகை
செல்லுபடியாகும். இலங்கையில் இதுவரை 6500 பேர் ஹஜ் செய்வதற்காக
விண்ணபித்துள்ளனர். ஆனால், இம்முறை 2800 பேருக்கு மட்டுமே ஹஜ் செய்வதற்கான
கோட்டா கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment