Saturday, 27 April 2013

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க தீவிர முயற்சி


கரூர் அருகே 500 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி: மீட்புப்பணிகள் தீவிரம்
கரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை அடுத்த முத்தூரைச் சேர்ந்தவர் பாணடி பூசாரி. இவர் தனது மனைவி பெருமாயி பெண் குழந்தை முத்துலட்சுமி மற்றும் தாய், தந்தையருடன் கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சியை அருகேயுள்ள தூரிபாளியை அடுத்த இனங்கனூர் கிராமத்தில் சக்திவேல் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தோட்டத்து அருகிலேயே குடிசை வீடு கட்டி அதில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் தனது தோட்டத்தில் விவசாயத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 700 அடி ஆழ்குழாய் கிணறு அமைத்தார். அந்தக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால் அப்படியே விட்டுவிட்டனர்.
இந்நிலையில் ஆழ்குழாய் சாக்கு துணியை வைத்து மூடி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் பாண்டி பூசாரியின் மகள் முத்துலட்சுமி, அந்தப் பகுதியில் உள்ள தோழிகளுடன் ஆழ்குழாய் கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆழ்குழாய் கிணற்றை எட்டிப்பார்த்துள்ளார். எதிர்பாராதவிதமாக தவறி ஆழ்குழாய்க்குள் விழுந்தார். இதையடுத்து மற்ற குழந்தைகள் ஒடிச் சென்று முத்துலட்சுமியின் தாத்தா முத்துப்பாண்டியிடம் நடந்ததைதக் கூறியுள்ளனர். முத்துப்பாண்டி ஆழ்குழாயை பார்த்தபோது, சுமார் 12 அடி ஆழத்தில் முத்துலட்சுமி சிக்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அருகில் கிடந்த சேலையை எடுத்து ஆழ்குழாய்க்குள் விட்டு,  முத்துலட்மியைக் பிடித்துக் கொள்ளும்படி கூறினார். சிறுமியும் அந்தப் புடவையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இது குறித்து உடனடியாக அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை, போலீஸார், 108 ஆம்புலன் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற அவர்கள் குழந்தை உயிருடன் மீட்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே சிறுமி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிக் கொண்ட தகவல் பரவியது. ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குழுமினர். சம்பவ இடத்துக்கு கோட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியநாரயண், கோட்டாட்சியர் நெல்லைவேந்தன் ஆகியோர் விரைந்து சென்றனர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.உடனடியாக குழாய் மூலம் அந்த சிறுமி சுவாசிக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. இதையடுத்து 3 பொக்கலைன் இயந்திரங்கள் மூலம் ஆழ்குழாய் கிணற்றுக்குள் அருகில் குழி தோண்டப்பட்டது.  5 அடிக்குமேல் பாறையாக இருந்தததால், டிரில்லிங் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது.
சம்வப இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி நேரில் விரைந்து குழந்தையை உயிருடன் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினார்.சிறுமியை மீட்கப்பட்டவுடன் முதலிதவி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தலைமையில் ஒரு குழு தயார் நிலையில் இருந்தது. மாலை 4.30 மணி வரை சிறுமியை உயிருடன் மீட்க போலீஸார், தீயணைப்புத் துறை மற்றும் பொதுமக்கள் தீவி்ர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment