
இலங்கையைச் சேர்ந்தசிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி விப்ரா ரகு ஆகியோர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிவீட்டில் சடலமாக மீட்கப்படடனர்.
இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது மகளின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மகள் மற்றும் அவளின் காதலன் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.தன் தந்தையின் கண்களை தோண்டுமாறு காதலனிடம் தலக்ஷனா என்ற மாணவியே கோரியிருந்தார் என்றும் அதன் படிதான் தான் அவரின் கண்களை தோண்டியதாக அந்த மாணவின் காதலன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்
இவர்கள் இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன் முன்னிலையில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் மே 8ஆம் தேதி வரை காவலில்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
காவலில்வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் 15-16 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரட்டைப் படுகொலை விசாரணைகளை அவதானிப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment