
புதுடெல்லி: ‘‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத கலவரங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.இது பற்றி டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: நாட்டில் கடந்தாண் டில் இருந்து மத கலவரங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு நாடு முழுவதும் 410 மத கலவரங்கள் நடந்தன. இந்த ஆண்டில் இதுவரை 451 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் அமைதியை சீர்குலைக்க மத கலவரங்கள் அதிகரிக்கக் கூடிய அபா யம் இருப்பதால், அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிரச்னையை உறுதியாக கையாளும்படி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன் நானே தனிப்பட்ட முறையில் இது பற்றி விவாதித்துள்ளேன். இவ்வாறு ஷிண்டே கூறினார்.
No comments:
Post a Comment