Tuesday, 29 October 2013

ஏழை இஸ்லாமிய பெண் திருமணத்துக்கு ரூ.50,000 கர்நாடக மாநில அரசு அறிவிப்பு



பெங்களூர்: கர்நாடக மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கும் குறைவாக உள்ள இஸ்லாமிய குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களின் திருமணத்துக்கு பீரோ, படுக்கை, தலையணை மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படும். இதுதவிர ரூ.15 ஆயிரம் ரொக்கமாக அளிக்கப்படும். ஆக, மொத்தம் திருமண பரிசாக ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.சீர்வரிசைப் பொருட்களுக்கு பதிலாக முழுவதும் பணமாக தேவை என்று கேட்கும் ஜோடிகளுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கமாகவே வழங்கப்படும். மணமகளுக்கு 18 வயது, மணமகனுக்கு 21 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே இந்த பரிசுகள் வழங்கப்படும்.மத வழிபாட்டு தலங்களில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் அல்லது மாவட்ட சார்& பதிவாளர் பதிவு செய்த ஆவணத்தை காண்பித்து பரிசு பெறலாம். திருமணமாகப் போகிறது என்றால் ஒரு மாதத்துக்கு முன்பாக சிறுபான்மை நலத்துறையின் மாவட்ட பிரிவுக்கு தகவல் தெரிவித்தால், திருமணத்தின்போதே பரிசுப் பொருட்களும் சேர்த்து வழங்கப்படும்.இவ்வாறு, அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment