
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிஸ்கட்களில் ஒன்று தான் ஓரியோ(OREO).
இந்த பிஸ்கட்டுக்காக வரும் விளம்பரங்களும் குழந்தைகள் மனதை மயக்கிவிட்டன.
கடைக்கு சென்றாலே முதலில் கண் தேடுவது ஓரியோ பிஸ்கட்டை தான் என்ற நிலை வந்து விட்டது.
இந்த பிஸ்கட்டை போன்றே பல நிறுவனங்களும் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது.
மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment