
மும்பையை அடுத்த குர்கான் பகுதியான சந்தோஷ்நகர் என்ற இடத்தில் 20 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் தீபாவளி பண்டிகையை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை அவர்கள் தங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதை ஏற்று அந்த பெண்ணும் அவர்களுடன் தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று, குளிர்பானத்தில் பீர் கலந்து கொடுத்து குடிக்க வைத்தனர். பின்னர் 6 பேரில் 4 பேர் அந்த பெண்ணை ஒருவர்பின் ஒருவர் கற்பழித்தனர்.
பிறகு அந்த பெண்ணை தங்களுடன் விடுதிக்கு வருமாறு அவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த பெண் அவர்களுடன் தப்பிச்சென்று தனது உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். இதுகுறித்து நேற்றுமுன்தினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்ணை கற்பழித்த 6 பேரை பிடிக்க 2 தனிப்படையை அமைத்து வலைவீசி தேடிவருகிறார்கள்.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் அடைந்து விட்டார். அவரது தாயாரும் சமீபத்தில் அவரை விட்டு சென்று விட்ட நிலையில் அந்த பெண் தனது சகோதரனின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.
No comments:
Post a Comment