
பிரான்ஸ் நாட்டில் சிறையிலிருந்து வெளியில் வந்த நபர் ஒருவர், காதலியின் தொல்லை தாங்க முடியாமல் மீண்டும் தவறு செய்து விட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாஸ் டி கேலாய்ஸ் நகரை சேர்ந்த 50வயது நபர் ஒருவர், குடி போதையில் வாகனம் ஓட்டியது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்பின் சமீபத்தில் பரோலில் வெளியே வந்த அவருக்கு, கைதிகளுக்கு பொருத்தப்படும் எலக்ட்ரானிக் சிப் ஒன்றை உடலில் பொருத்தி பரோலில் விட்டுள்ளனர்.
மேலும் குற்றவாளி, பரோல் காலத்தில் தப்பி விடாமல் இருக்க இந்த எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படுகிறது.
இந்நிலையில் பரோலில் வந்த இவர், திடீரென தன் உடலில் இருந்த எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்து விட்டார்.
அதில் இருந்து சிக்னல் வராததால், உஷாரடைந்த அதிகாரிகள் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தி ஆசாமியை சுற்றிவளைத்தனர்.
இதனையடுத்து இவரிடம் நடத்திய விசாரணையில், காதலியின் தொல்லை தாங்க முடியாததால் தான் எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்தேன் என்றும் வெளியில் இருந்து காதலியிடம் மோதிக் கொண்டிருப்பதை விட சிறையில் இருப்பது மேல் என்பதால் என்னை சிறைக்கு அழைத்து செல்லுங்கள் எனவும் கூறியுள்ளார்.
எனவே எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்த குற்றத்திற்காக இவருக்கு 2 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment