
இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த பொலிஸ் அதிகாரி 24 மணி நேரத்தில் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். |
திங்கள்கிழமை அன்று பெங்களூரில் உள்ள கன்னிங்காம் சாலையிலுள்ள காபி ஷாப்பிற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களை 50 மதிக்கத் தக்க நபர் செல்போனில் படமெடுத்துள்ளார். இதனையடுத்து, இரு பெண்களும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், காபி ஷாப்பில் இருந்த சிலர் அவரிடமிருந்த செல்போனை பிடுங்கி பார்த்தபோது ஆபாச படமெடுத்தது தெரியவந்தது. தகவலை அடுத்து விரைந்துவந்த ஹை கிரவுண்ட் பொலிஸார் அந்த இரு இளம்பெண்களையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபர், என்னுடைய பெயர் பி.ரவீந்திர நாத் என்றும் பெங்களூர் ஏடிஜிபி போலீஸ் அதிகாரியாக (பொறுப்பு) இருக்கிறேன் என தன்னுடைய அடையாள அட்டையையும் காட்டியுள்ளார். இதனிடையே ரவீந்திர நாத் அங்கிருந்து கைப்பேசி மூலம் மற்றொரு ஏடிஜிபி அதிகாரியான ரவிகரந்த் கவுடாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஹை கிரவுண்ட் காவல் நிலையத்திற்கு வந்த அவர், இவர் ஐபிஎஸ் அதிகாரிதான் எனச் சொல்லி வெளியே அழைத்துவந்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கப்பன் பூங்கா பொலிஸ் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தனர். இந்நிலையில், கப்பன் பூங்கா பொலிஸார் அவர் அதிகாரி என தெரியாமலே வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி கசிந்தது. இதுகுறித்து பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் ராகவேந்திர அவ்ராத்கர் விசாரித்ததில், ஏடிஜிபி ரவீந்திரநாத் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்தது தெரிய வந்தது. பின்னர், மாநில பொலிஸ் டிஜிபி லால் ருக்மா பச்சாவோ கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து ஏடிஜிபி பி.ரவீந்திரநாத் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்துள்ளார். |
No comments:
Post a Comment