Sunday, 2 June 2013

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை பாதிக்கும் கதிர்வீச்சு: ஆய்வில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை பாதிக்கும் கதிர்வீச்சு: ஆய்வில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் ஆறுகளும், ஓடைகளும் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள என்டீவர் விண்கலத்தை நாசா அனுப்பியது. அந்த ஆய்வக விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாயில் தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது. அங்கு பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை வெட்டி எடுத்து போட்டோக்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. அங்குள்ள தட்ப வெப்ப நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களை ஆய்வு செய்ததன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தது. தற்போது, என்டீவர் விண்கலம் வெட்டி எடுத்த பாறைகளை டென்னீஸ் பல்கலைக் கழகத்தின் பூமி மற்றும் கோள்கள் அறிவியல் துறை பேராசிரியர் லிண்டா ஹா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர். அந்த பாறைகள் கூழாங்கற்களால் ஆனவையாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை உருண்டை வடிவத்தில் உள்ளன.

மேலும், அவை ஒன்றிணைந்து கான்கிரீட் போன்று இறுகி கிடக்கின்றன. இந்த கூழாங்கற்கள் பாறைகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஓடைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும், அவை செவ்வாய் கிரகத்தில் பல கிலோ மீட்டர் தூரம் பரவி இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்துக்கு என்டீவர் விண்கலத்தை அனுப்பிய அமெரிக்கா,  2030-ல் விஞ்ஞானிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதேபோன்று, ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை சுற்றுலா அனுப்பவும் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், அங்கு கதிர்வீச்சு அதிகமாக இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.  50 சி.டி. ஸ்கேஸ் அளவுக்கு கதிர்வீச்சு வெளிப்படும். அதன் மூலம் புற்று நோய் உருவாகும் என தெரியவந்துள்ளது. கடந்த 8 1/2 மாதங்களாக என்டீவர் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கி ஆய்வு செய்து வருகிறது. அது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது அதில் கதிர் வீச்சு தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு இருப்பது நிரூபணமாகியுள்ளது.

No comments:

Post a Comment