Friday, 14 June 2013

கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிறுவர்களின் பங்கு அதிகரிப்பு

 

டெல்லியில் 2012 ஆம் ஆண்டில் கொலை வழக்கில் 100 சிறுவர்களும், கற்பழிப்பு வழக்கில் 60 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 2011 ஆம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும், ஆனால், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை வெகு குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், 74 சிறுவர்கள் கொலை முயற்சி வழக்கிலும், 18 பேர் ஆள்கடத்தல் வழக்கிலும், 10 பேர் கற்பழிப்பு முயற்சி வழக்கிலும், 13 பேர் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில், ஆந்திரம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை முன்னணியில் உள்ளன.

சமுதாயத்தில் பண்பு ரீதியாக ஒரு மாற்றம் உருவாக்காமல் இந்த அரசுகள் இன்னும் காலம் கடத்துமேயானால் நாட்டின் எதிர்காலம் படுமோசமாகும் என்பதில் மாற்றமில்லை.

No comments:

Post a Comment