Tuesday, 11 June 2013

உலக நாடுகளின் இந்தியாவில் வன்முறை அதிகம்:ஆய்வு




மும்பை : குளோபல் பீஸ் இண்டக்ஸ்(ஜிபிஐ) நிறுவனம் மிகக் குறைந்த அமைதியும், வன்முறை அதிகமும் கொண்ட 25 உலக நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. அமைதி நிலவும் 162 நாடுகளில் இந்தியா 141வது இடத்தில் உள்ளது. வன்முறை அதிகம் நிறைந்த நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், ஈராக், தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த பட்டியலில் பூட்டான் முதல் இடத்திலும், நேபாள் 2வது இடத்திலும், வங்கதேசம் 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும் உள்ளது. 2012ல் அதிகம் அமைதி நிறைந்த நாடுகளில் ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. மத்திய ஆப்பிரிக்கா கடைசி இடத்தில் உள்ளது. 

No comments:

Post a Comment