Wednesday, 26 June 2013

கடனை திரும்ப கேட்ட நண்பரின் குடும்பத்தை, விஷம் கொடுத்து கொல்ல முயற்சி





போடி:கடனை திரும்ப கேட்ட நண்பரின் குடும்பத்தை, கள்ளக்காதலி உதவியுடன், விஷம் கொடுத்து கொல்ல நடந்த முயற்சியில், சிறுமி பலியானார். சதித்திட்டம் தோல்வியில் முடிந்ததால், கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலன் 
உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி காமாட்சியம்மன் கோயில் தெருவில், நகை பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ், 35. இவரது நண்பர் ராஜ்குமார். இவரது மனைவி செல்வமாரி, 37. இவர்களுக்கு விக்னேஷ்,15, சவுந்தர்யா,11, குபேந்திரன்,6, ஆகிய குழந்தைகள் உள்ளனர். 
ராஜ்குமார் வீட்டருகே வசிப்பவர் கீதா, 32. இவருக்கும் சுரேஷூக்கும், இடையே கள்ளத்
தொடர்பு இருந்துள்ளது. சுரேஷ், தொழில் அபிவிருத்திக்காக, 
ராஜ்குமாரிடம் நாலரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ராஜ்குமார் கடனை கேட்டுள்ளார்.
திரும்ப கொடுக்க முடியாத சுரேஷ், நண்பர் ராஜ்குமார் குடும்பத்தையே விஷம் வைத்து கொல்ல முடிவு செய்தார். இதற்கு தனது கள்ளக்காதலி கீதா, மற்றும் நண்பர்கள் உதவியை நாடியுள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு, தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
இதற்காக, கீதா முதலில் தனது கணவருக்கு, தூக்க மாத்திரைகளை கொடுத்து, தூங்க வைத்து விட்டார். பின்னர், பாயசம் காய்ச்சி, அதில் "சயனைடு' விஷத்தை கலந்தார். அப்போது சிறுமி சவுந்தர்யா அங்கு வந்துள்ளார். 
அவருக்கு கீதா பாயசத்தை கொடுத்துள்ளார். அதை குடித்து, மயங்கி விழுந்த சவுந்தர்யா இறந்தார். அவரது உடலை, கீதா தனது வீட்டு பீரோவிற்குள் வைத்து, பூட்டி வைத்தார்.
பின்னர், பாத்திரத்தில் பாயசத்தை எடுத்துக் கொண்டு, ராஜ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ராஜ்குமார் மனைவி செல்வமாரி, மகன் குபேந்திரனிடம், ""இது கோயில் பிரசாதம், குடியுங்கள்,'' என கொடுத்துள்ளார். செல்வமாரி பாயசத்தை வாயில் வைத்ததும், சுவை வேறு பட்டதால், உடனே துப்பி விட்டார். குபேந்திரன் பாயசத்தை குடித்து, மயங்கி விழுந்தான். 
அப்போது செல்வமாரி, ""என்னத்த கொண்டு வந்து கொடுத்தாய்'' எனக்கூறி, சத்தமிட்டுள்ளார். உடனே, கீதா தன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். அவருடன் சென்றிருந்த சுரேஷ், நண்பர்கள் காமாட்சி, கணேசன், விஜி ஆகியோரும் ஓடி விட்டனர்.
பதட்டமடைந்த கீதா, தனது வீட்டிற்கு சென்று, மீதம் இருந்த பாயசத்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார். அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், மயங்கி கிடந்த குபேந்திரனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
தகவல் அறிந்து வந்த போடி போலீசார், கீதாவின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது இறந்த கிடந்த கீதா, அவரது வீட்டின் பீரோவிற்குள் இருந்து சவுந்தர்யா ஆகியோரது உடல்களை மீட்டனர். விசாரணையில், 
"சுரேஷ் தனது கள்ளக்காதலி கீதா உதவியுடன், இந்த கொலை 
திட்டத்தை நிறைவேற்றியது,' தெரியவந்தது. சுரேஷ், அவருக்கு உடந்தையாக இருந்த காமாட்சி, கணேசன் ஆகியோரையும் கைது செய்த போலீசார், தப்பி 
ஓடி விட்ட விஜியை தேடி 
வருகின்றனர்.

No comments:

Post a Comment