Sunday, 16 June 2013

மது அருந்த பணம் கேட்ட கணவன் கொலை செய்த மனைவி




திருச்சி, மணப்பாறை அருகே மது அருந்த பணம் கேட்டதில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கணவனை கல்லால் தாக்கி மனைவி கொலை செய்தார்..
வையம்பட்டி ராமரெட்டிப்பட்டியைச் சேந்தவர் மாரியம்மாள் (34). இவரது கணவன் பழனிச்சாமி (37). இவர் அருகில் உள்ள ஆவாரம்பட்டியைச் சேந்தவர். இருவரும் திருச்சியில் கட்டட வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பழனிச்சாமி மது அருந்துவதற்காக மாரியம்மாளிடம் பணம் கேட்டார். மாரியம்மாள் பணம் தர மறுத்த நிலையில், அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, நீ என் சொந்த ஊரான ஆவாரம்பட்டிக்கு வந்துவிடு; அங்கே குடும்பம் நடத்தலாம் என்று தகராறு செய்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில், பழனிச்சாமி பாறாக்கற்கள் இரண்டை எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்துள்ளார். மனைவியைக் கொலை செய்யும் நோக்கத்தில் அவர் கற்களை எடுத்துவந்து, மனைவி மீது வீச முயன்றுள்ளார். ஆனால், மாரியம்மாள் அதற்கு முன்னர் அந்தக் கற்களை எடுத்து பழனிச்சாமியின் தலையில் வீசி அவரைக் கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீஸார் மாரியம்மாளைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment