Sunday, 1 September 2013

வரதட்சணை கொடுமைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி



நம் நாட்டில் வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் இறப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் இறப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅத்தகவல்படி, 2007 ஆம் ஆண்டு 8,093 ஆக இருந்த வரதட்சணையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முறையே 8,172 மற்றும் 8,383 ஆக அதிகரித்துள்ளது.இந்த எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு 8,233 ஆக இருந்துள்ளது. 

வரதட்சணை கொடுமைகளில் வறுமையில் வாடுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் முதல் மேல்தட்டு மக்கள் வரை ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment