
சீனாவில் கணவரால் துன்புறுத்தபட்ட பெண் ஒருவர், அவரை கொடுமைபடுத்தி கொலை செய்து சடலத்தை சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனப்பெண் ஒருவர் தன்னையும், தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று, சடலத்தை மறைப்பதற்காக, அதைக் குக்கரில் சமைத்துள்ளார்.
சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மகளை அவரது கணவர் கொடுமைப்படுத்தி துன்புறுத்தியுள்ளார்.தினமும் அப்பெண்ணையும், அவரது மகளையும் அந்த நபர்
அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண், அவரது கணவரின் கைகளை வெட்டி, 3 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் அவரை பட்டினி போட்டு, அடித்தும் சித்ரவதை செய்துள்ளார்.
தொடர் கொடுமைகளை தாங்க முடியாத கணவர் மரணமடைந்து விட போலீசில் இருந்து தப்பிக்க தடயத்தை அழிக்க நினைத்த அப்பெண். கணவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்துள்ளார்.
ஒரு கொடூரமான கொலையை செய்துவிட்டு குற்ற உணர்ச்சியால் தவித்த அப்பெண் சில நாட்களிலேயே 6.3 கிலோக்களை இழந்துள்ளார். போலீசார் விசாரித்தப்போது பதிலளிக்க தடுமாறிய அப்பெண் மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர் கைது செய்யபட்டார்.
No comments:
Post a Comment