Monday, 6 May 2013

7லைபலாத்காரம் செய்த 70 வயது

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது முதியவர் கைது


7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது முதியவரை மராட்டிய போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம், பிட் மாவட்டம் அருகே உள்ள ஹிங்னி பட்ரக் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது, அவ்வழியாக வந்த தாமோதர் ஹிம்தாஜி டோங்ரே (70) அந்த சிறுமியை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

அப்போது சிறுமி அலறி துடித்த சத்தம் கேட்ட அவளது மாமா ஓடிவந்து, முதியவரின் பிடியில் இருந்து அவளை காப்பாற்றினார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பாட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த 70 வயது முதியவரை கைது செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment