Tuesday, 28 May 2013

பாரதீய ஜனதாவில் இருந்து ராம் ஜெத்மலானி அதிரடி நீக்கம்

பாரதீய ஜனதாவில் இருந்து ராம் ஜெத்மலானி அதிரடி நீக்கம்
பாரதீய ஜனதா கட்சியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எம்.பி. நீக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு கட்சியின் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ராம் ஜெத்மலானியை கட்சி மேலிடம் நீக்கியது. அதன்பின்னர் சமரசம் ஏற்பட்டதையடுத்து அவர் கட்சியில் நீடித்து வந்தார். 

இந்நிலையில் கட்சிக்கு எதிராக மீண்டும் கருத்து தெரிவித்ததால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து தகுதிகளில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கி மேலிடம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராம் ஜெத்மலானி செயல்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாராளுமன்றக் குழு கூறியது.

No comments:

Post a Comment