Sunday, 14 July 2013

மனைவியை விற்ற கணவன், அவரது நண்பர் கைது

 மகாராஷ்டிரத்தில் மனைவியை விற்ற கணவன், அவரது நண்பர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்த ஜல்கான் நஹடே என்ற கிராமத்தை சேர்ந்தவர் பண்ட்லிக் சவான். இவர் தன் மனைவியை, தனது நண்பர் கணேஷ் வாலோட் என்பவருடன் சேர்ந்து மத்தியப்பிரதேசம் மாநிலம் கார்கான் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் ஆசராம் வாலோட் என்பவருக்கு விற்றுள்ளார். 

இதுகுறித்த செய்தி சவானின் மைத்துனிக்கு தெரியவர அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 370 கீழ் வழக்கு பதிந்து போலீசார் சவான் மற்றும் அவரது நணபர் கணேஷை கைது செய்தனர். 

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 15-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி 
உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment