Tuesday, 16 July 2013

பார்களில் ஆட்டம் - பாட்டம் போடலாம் ;சுப்ரீம் கோர்ட்


மும்பை: மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பார்கள் நடத்தும் ஓனர்கள் , மற்றும் அழகிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பலரும் மகிழ்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளனர்,
மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் அரசு அனுமதி பெற்று பார்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு அழகிகளின் ஆட்டம் பாட்டம் பெரும் குதூகலிப்பை ஏற்படுத்தி வந்தது. இது பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் மாநில அரசு தடை செய்தது. இதனை எதிர்த்து மகாராஷ்ட்டிரா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட், பார்களுக்கு அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஐகோர்ட் உத்தரவை ஏற்றுக்கொண்டது. இதில் மும்பையில் பார்களை மீண்டும் திறந்து ஆட்டம் போடலாம் என்றும், பார்களில் ஆட்டத்திற்கு தடை இல்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மும்பை மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பார்கள் திறந்து கொள்ளலாம். இதற்கென உரிய லைசென்ஸ் வாங்கி கொளள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சம்பாதிக்கும் 70 ஆயிரம் பெண்கள் : மாநில அரசின் தடை, அரசியலமைப்பு சட்ட நடைமுறைக்கு எதிரானது. மும்பையில் இது போன்ற ஆட்டம் போடும் சுமார் 70 ஆயிரம் பெண்கள் தாங்களாகவே சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்புக்கு தடையாக இருக்க கூடாது என்றும், ஐகோர்ட் தனது கருத்தில் தெரிவித்திருந்தது. அரசு தரப்பில், பெண்களின் ஆட்டம் மிக வல்கராக இருப்பதாகவும், இதனால் பெண்கள் பாதிக்கப்படலாம் என்றும் வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பு நியாயங்கள் எடுபடாமல் போனது.

கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட இந்த பார் ஆட்டம் மீண்டும் துவங்கவுள்ளது. இதனை இங்குள்ள ஆடம்பரவாசிகள் , நடன அழகிகள் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment