
கோவை மாவட்டம் துடியலூர் அருகே இடிகரை செல்லும் சாலையில் ரங்கம்மாள் காலனி உள்ளது. இங்கு இதயத்துல் முஸ்லிம் ஆகேலே ஜமாத் என்ற முஸ்லிம் வழிபாட்டுத் தலம் உள்ளது.
இங்கு இன்று காலை 5 மணியளவில் ஒரு கும்பல் வந்தது. வாகனத்தில் வந்த அந்த கும்பல் வழிபாட்டுத் தலம் மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதில் வழிபாட்டுத்தலத்தில் விரிக்கப்பட்டிருந்த பாய், பிளாஸ்டிக் பக்கெட் ஆகியவை எரிந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வேகத்தில் அந்த குண்டு அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் போய் விழுந்தது. இதனால் பெரிய சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
சேலம் பாரதீய ஜனதா நிர்வாகி கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பந்த் நடைபெற்ற இந்த சமயத்தில் முஸ்லிம் வழிபாட்டுத் தலம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி. மோகன், துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
No comments:
Post a Comment