ஆந்திரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, கல்லூரி மாணவியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டார். புத்தகம் வாங்க வந்திருந்த மற்றொரு மாணவரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ரெய்ச்சூர் தொகுதி பாஜக எம்.பி. சன்னா பகிரப்பாவின் மகன், முத்து சன்னா பகிரப்பா தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சென்று, வீட்டில் தனியாக இருந்த தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கியுள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முத்து சன்னா பகிரப்பா உள்பட 6 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 30ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
No comments:
Post a Comment