
காதலியின் அதீத ஆசையினால் காதலன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கடை ஒன்றுக்கு, தாவோ ஹசியோ(வயது 38) என்பவர் தனது காதலியுடன் சென்றுள்ளார்.
அங்கு சுமார் 5 மணிநேரம் இருவரும் சுற்றித் திரிந்து, சுமக்க முடியாத அளவிற்கு ஏராளமான பொருட்களை வாங்கினர்.
இதனால் சோர்வடைந்த காதலன் வீட்டிற்கு போகலாம் என கூறியுள்ளார்.
ஆனால் காதலியோ, இன்னும் ஒரு கடைக்கு செல்ல வேண்டும். அங்கு ஷூவுக்கு சிறப்பு தள்ளுபடி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுக்க அணிய போதுமான ஷூக்கள் இருக்கிறதே? பிறகு புதிதாக வாங்க வேண்டுமா? என காதலன் கேட்க தகராறு முற்றியது.
இதனால் மனமுடைந்த காதலன், 7வது மாடியில் இருந்து குதித்து விட்டார்.
உடனடியாக அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்தும், எவ்வித பலனும் இல்லாமல் போய்விட்டது, காதலன் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment