இதையடுத்து, வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்புவதாக இருந்த "துசோபாஸ்' என்று பெயரிடப்பட்ட அந்த தொடரை, கொல்கத்தா தனியார் தொலைக்காட்சி ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மில்லி இத்திஹாத் பரிஷத் அமைப்பின் தலைவர் அப்துல் அஜீஸ் கூறுகையில், "இந்த தொலைக்காட்சித் தொடரில் வரும் காட்சிகள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்' என்று கூறினார்.
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் புத்தகங்களை எழுதியதாக, வங்கதேச அரசு தஸ்லிமா நஸ்ரீனை 1994ஆம் ஆண்டு நாடு கடத்தியது.
பின்னர் அவர் மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வந்தார். அங்கும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதால், மத்திய அரசு உதவியுடன் தஸ்லீமா நஸ்ரீன் தில்லியில் வசித்து வருகிறார்.
No comments:
Post a Comment