Saturday, 7 June 2014

ஆபாச தளங்களை வரவிடமாட்டோம்: சீனா அதிரடி


ஆபாச இணையதளங்களை இழுத்து மூடும் பணியில் சீன அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 'ஆபரேஷன் போர்னோகிராபி' என்ற ஆபாச இணையதளங்களை மூடும் பணியில் இதுவரை, 450 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
பாலியல் வன்முறையை தூண்டும் இந்த ஆபத்தான இணையத்தளங்களை முற்றிலுமாக ஒழிக்கும் பணி வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் அந்நாட்டின் அரசாங்கமே விரைவில் இந்த ஆபாச இணையதளங்களை நன்கு கண்காணித்து, அவற்றை மூட திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment