Wednesday, 18 June 2014

கொழும்பில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்


கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது அலுத்காமா, பெருவாலா நகரங்கள். முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இப்பகுதியில் சில நாட்களுக்கு முன் முஸ்லிம் இளைஞர்களுக்கும், புத்த துறவிகளின் டிரைவர் ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, அலுத்காமாவில் புத்தமதத்தினர் நேற்று முன்தினம் ஊர்வலம் சென்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதற்கிடையே அலுத்காமா மசூதி அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் முஸ்லிம் ஒருவர் இறந்து கிடந்தார்.வன்முறையில் மேலும் 4முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வன்முறை காரணமாக, அலுத்காமா, பெருவாலாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கை அதிபர் ராஜபக்சே பொலிவியா நாட்டில் சுற்றுபயணம் செய்து வருகிறார். அங்கிருந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘சட்டம் ஒழுங்கை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கலவரத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment