
ஜோதிடம் பார்க்கும் தொனியில் பெண்களை அணுகி, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2011ஆம் ஆண்டில் பென்டிகோ, மெல்பேர்ண் நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட V/Line ரயில் வண்டிகளில் தொடர்ச்சியான பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டதாக அஜய் சோப்ரா என்ற நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
41 வயதான அஜய் சோப்ரா, தம்மை கைரேகை பார்த்து சோதிடம் கூறுவதில் தேர்ச்சி பெற்றவராக சித்தரித்துக் கொண்டு பெண்களின் கையைப் பிடித்து சேஷ்டைகள் புரிந்ததாக தெரிகிறது.
இந்த மனிதர் ஒரு பெண்ணின் கையைப் பிடித்தாரென்றால், குறித்த பெண் எத்தகைய பாடுபட்டாலும் கையை விட மாட்டாரென சட்டத்தரணி நீல் ஹற்றன் தெரிவித்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அஜய் சோப்ரா தமது கையை பெண்ணொருவரின் ஆடைக்குள் இட்டதாகவும், மற்றைய சந்தர்ப்பத்தில் பெண்ணொருவரின் கையை எடுத்து தமது மர்மப் பிரதேசத்தில் வைத்தததாகவும் முறையிடப்பட்டிருக்கிறது.
இவர் 18 வயதான பிள்ளையையும் விடவில்லையென சட்டத்தரணி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment