Saturday, 7 June 2014

கடலை தோண்டிய முட்டாள் அமெரிக்கர்கள்:


மெரிக்காவில் கோடீஸ்வரர் ஒருவர் தன் பணத்தை கடற்கரையில் புதைத்துள்ளதாக 'டிவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவல் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 'டிவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட தகவலில், 'என்னிடம் உள்ள பணத்தை சிறு, சிறு பையில் போட்டு, ஹர்மோசா கடற்கரை முழுவதும் புதைத்து வைத்துள்ளேன், தேவைப்படுபவர்கள் எடுத்து கொள்ளலாம்' என கூறியிருந்தார்.
இதை படித்த அந்நாட்டு மக்கள் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை உள்ள கடற்கரை பகுதியை தோண்டி, பணத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த தகவல் உண்மைதானா என்பதை கூட உறுதி செய்துக்கொள்ளாமல், இவ்வாறு இவர்கள் கடலை தோண்டுவது வேடிக்கையாய் உள்ளது.

No comments:

Post a Comment