புதுடெல்லி, ஜூன் 1–
டெல்லியை நேற்று முன் தினம் மிகப்பெரிய சூறாவளி காற்று தாக்கியது.
டெல்லி நகரை தலை கீழாகப் புரட்டிப் போட்டு மக்களை கதி கலங்க செய்யும் வகையில் சூறாவளி காற்றின் தாக்கம் இருந்தது.
டெல்லியின் பல பகுதியிலும் சுழன்று வந்த அந்த புயலின் ஒரு புழுதிப் புயலாக இருந்தது. இந்த புழுதிப் புயல் மணிக்கு சுமார் 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் வீசியது.
அப்போது பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயல் சீற்றம் காரணமாக டெல்லியில் சுமார் 400 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 12 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியை பந்தாடிய அந்த புயல் நேற்று 2–வது நாளாக வட மாநிலங்களில் அச்சுறுத்தியது. அரியானா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் புழுதிப்புயல் தாண்டவமாடியது.
இதில் பல்லாயிரக் கணக்கான வீடுகள் நொறுங்கி சேதம் அடைந்தன. கார்களும் சேதம் அடைந்தன. பல ஊர்களில் மின்தடை ஏற்பட்டது.
புழுதிப்புயல் சீற்றம் காரணமாக டெல்லியில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 17 மணி நேரம் டெல்லி மக்கள் மின்சார இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டனர். தற்போதுதான் டெல்லியில் நிலைமை சீரடைந்து வருகிறது.
மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் முடங்கியது. சில இடங்களில் இன்னமும் போக்குவரத்து சீராகவில்லை.
நேற்று 2–வது நாள் புழுதிப்புயல் வேகம் அதிகமாக காணப்பட்டது. புழுதிப் புயலுக்கு வட மாநிலங்களில் இதுவரை 45 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்றும் வட மாநிலங்களில் புழுதிப்புயல் வீசியது. நாளையும் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதாக டெல்லி நகர மக்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment