Sunday, 1 June 2014

உ.பி.யில் மீண்டும் கொடூரம்: மேலும் ஒரு சிறுமி தீ வைத்து எரிப்பு

லக்னோ, ஜுன் 1-

உ.பி மாநிலத்தின் கோர முகம் கடந்த சில நாட்களாகவே வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பதானில் இரண்டு சிறுமிகள் கற்பழித்து தூக்கில் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்ட கொடூரத்தின் வடு மறைவதற்குள் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள பிரதான் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் நாட்டாமையான முன்னா சுக்லா, பார்வாலியா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப முயன்றதை தடுக்க முயற்சித்துள்ளார். அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் உடன்பட மறுக்கவே அவரை சுக்லாவும் அவரது ஆட்களும் பலமாக தாக்கியுள்ளனர். தந்தை அடிபடுவதை பார்த்த அவரது மகள் தாக்குதலை தடுக்க முயன்றபோது அப்பெண்ணை மானபங்கம் செய்ய முன்னா சுக்லா கும்பல் முயற்சித்துள்ளது.

அதோடு நில்லாமல் அந்த கும்பல் அப்பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டது. இதனால் அப்பெண்ணின் 90 சதவிகித பாகங்கள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கேப்டன்மஞ்ச் காவல்நிலையத்தை சேர்ந்த நிலைய அதிகாரியான கஜேந்திர ராய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment