Monday, 22 April 2013

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் சீதாராம் யெச்சூரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:÷தில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பம் மிகவும் கொடூரமானது. இது போன்று குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். சமூகத்தில் உள்ள சிலருக்கு சட்டத்தின் மீதான பயம் போய்விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது.
குற்றத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் தர போலீஸôர் முயற்சித்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸôர் தாக்கியுள்ளனர். இதுவும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்'' என்றார் யெச்சூரி.
முன்னதாக பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசுகையில், ""பாலியல் பலாத்காரத் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment