Tuesday, 7 May 2013

காணாமல் போன 3 இளம்பெண்கள்கண்டுபிடிப்பு


சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தனித்தனியாக காணாமல் போன 3 இளம்பெண்கள் கிளீவ்லாந்தின் தென்பகுதியில் ஒரு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இவர்களை மீட்ட காவல்துறையினர் இதற்குக் காரணமாயிருந்த மூன்று சகோதரர்களைக் கைது செய்துள்ளனர். அங்கு குவிந்திருந்த மக்களின் உற்சாகத்துக்கு இடையே அமன்டா பெர்ரி, கினா டிஜெசஸ், மிச்சேல் நைட் என்று அவர்கள் மூன்று பேரின் பெயர்களையும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இவர்களுடன் 6 வயது சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதை காவல்துறையினர் அறிவிக்கவில்லை.
ஆனால் அவர்கள் உடல்நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உரியவர்களிடம் சேர்க்கப்படுவார்கள் என்றும் விசாரணை முடிவு பெறும் போது தான் பல கேள்விகளுக்கு விடை தெரியும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் பெண்கள் காணாமல் போன இடத்திலிருந்து சிறிது தூரத்திற்குள்ளேயே திரும்பக் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment