
கடந்த 1450–ம் ஆண்டுகளில் ஜெர்மனியில் ஜோகனஸ் குடென்பெர்க் என்பவரால் ஒரு பைபிள் தயாரிக்கப்பட்டது. அது மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2009–ம் ஆண்டில் அந்த பைபிள் திடீரென மாயமாகிவிட்டது. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் செர்ஜி வெடிஸ்செவ் என்பவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை ரூ.7 கோடிக்கு விற்க முயன்றபோது போலீசாரிடம் இவர்கள் சிக்கினர். அதை தொடர்ந்து இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு செர்ஜி வெடிஷ் சேவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. மற்ற 2 பேருக்கு குறைந்த கால தண்டனை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment