மனைவியை வைத்து விபசாரம் செய்தவனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதியை சேர்ந்த அந்த நபர் சமூக வலைத்தளங்களின் மூலமாக தனது மனைவிக்கு விபசார தரகராக வேலை பார்த்து வந்துள்ளான். இது தொடர்பான தகவல் போலீசாரின் கவனத்துக்கு வந்ததும், அவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவன் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி 8 ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், தண்டனை காலத்துக்குள் ஆயிரம் சவுக்கடியும் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
தற்போது, பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவனது மனைவியின் மீது தனியாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment