Friday, 16 August 2013

திருக்கோவிலூர் சிறப்பு பஜனையில் காஷ்மீர் உமர் அப்துல்லா மனைவி பங்கேற்பு

திருக்கோவிலூர் பரனூர் மடத்தில் ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு பஜனை: உமர் அப்துல்லா மனைவி பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மடாதிபதியாக ராமகிருஷ்ணபிரேமி சுவாமிகள் இருந்து வருகிறார். காஷ்மீர் மாநில முதல்மந்திரி உமர் அப்துல்லாவின் மனைவி பாயல் அப்துல்லா, ராமகிருஷ்ண பிரேமியை சந்திப்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார்.
பின்னர் அவர் கார் மூலம் மதியம் 12.30 மணியளவில் பரனூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணபிரேமி சுவாமிகள் மடத்துக்கு வந்தார். அங்கு அவர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்.
சிறிது நேரம் ஆன்மிக அருளுரை கேட்ட பாயல் அப்துல்லா சரியாக 15 நிமிடத்துக்கு பின்னர் தன்னுடன் வந்திருந்த 2 பெண்களுடன் அருகில் உள்ள மடத்துக்கு சொந்தமான ஒரு வீட்டில் ஓய்வெடுத்தார். அங்கு தயார் செய்திருந்த மதிய உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் கோவில் அருகில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.  

No comments:

Post a Comment