Tuesday, 25 June 2013

ஒரே மணமேடையில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்




உதய்பூர்:ராஜஸ்தானில், பழங்குடியின வாலிபர் ஒருவர், ஒரே மேடையில், இரு பெண்களை மணந்து, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவர் செய்தது சட்டப்படி தவறு என்றாலும், ஆதிவாசிகளின் கடும் எதிர்ப்பால், போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

உதய்பூர் மாவட்டம், சத்தார்புரா கிராமத்தைச் சேர்ந்தவர், பகவதிலால் பார்கி, 23. பத்தாம் வகுப்பு படித்த இவர், உதய்பூர் அருகேயுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர், தங்கள் பகுதியை சேர்ந்த, ரேகா என்ற பெண்ணுடன் கடந்த, நான்கு ஆண்டுகளாக, திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தார்.

காதல்:இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், நாடி என்ற கிராமத்தை சேர்ந்த, மற்றொரு பெண்ணின் மீதும், காதல் கொண்டார். இரு பெண்களுமே பகவதிலாலை திருமணம் செய்ய சம்மதித்ததால், இருவரையும் ஒரே மேடையில் மணக்க தீர்மானித்தார்.இரு பெண்களின் வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும், பகவதிலால், தன் பெற்றோர் மற்றும் உறவினர்களின் துணையோடு, இரு பெண்களையும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார்.இது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு வந்த போலீசார், பகவதிலாலிடம் விசாரணை நடத்தினர். எனினும், ஆதிவாசிகளின் கடும் எதிர்ப்பை மீறி, போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாததால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.இச்சம்பவம், உதய்பூர் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment