Sunday, 16 June 2013

சொத்து தகராறில், அண்ணனை சிறை வைத்த தங்கை




தேவகோட்டை:சிவகங்கை தேவகோட்டையில், சொத்து தகராறில், அண்ணனை வீட்டுக்கு பூட்டி, சிறை வைத்த பெண் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
சொர்ணநாதன் வீதியில் வசிப்பவர் ஜாகீர் உசேன்,45. இவருக்கும், தங்கை ராபியாபீவிக்கும் சொத்து பிரச்னையில் வழக்கு உள்ளது. நேற்று முன்தினம், மதியம் 1 மணிக்கு, ராபியாபீவி, அவரது மருமகன் கனி, 30, அண்ணன் மகன் தாரிக் அன்சாரி, 20, ஆகியோர், ஜாகீர் உசேன் வீட்டிற்கு சென்றனர். வாக்குவாதம் ஏற்பட்டதால், ஜாகீர் உசேன் வீட்டில் இருந்த பெண்கள் வெளியேறினர். தனியாக இருந்த ஜாகீர்உசேனை, வீட்டுக்குள் வைத்து, ராபியாபீவி தரப்பினர் பூட்டினர்.

ஜாகீர் உசேனை மீட்கக்கோரி, மனைவி பிர்தவுஸ், நேற்று முன்தினம் இரவு, போலீசில் புகார் கொடுத்தார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு, எஸ்.ஐ. சகாதேவன், பூட்டை உடைத்து மீட்க முயன்றும் முடியவில்லை. இதன்பின், ராபியாபீவி, கனி, தாரிக் அன்சாரியை பிடித்த போலீசார், சாவியை வாங்கி பூட்டை திறந்தனர்; ஜாகீர் உசேன், 28 மணிநேரத்திற்கு பின், மீட்கப்பட்டார். ராபியா பீவி உட்பட மூவரை, இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கைது செய்தா



No comments:

Post a Comment